எம்எல்ஏக்கள் 11பேர் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் நாளை விசாரணை

0 2338
எம்எல்ஏக்கள் 11பேர் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் தனபால் நாளை விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களிடம்  சபாநாயகர் தனபால் நாளை விசாரணை மேற்கொள்கிறார்.

2017 ம் ஆண்டு  அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணியினராக செயல்பட்டபோது,  அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது  அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் 2 அணியினரும் ஒன்றாக இணைந்த நிலையில், 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பிலும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

  இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,  திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,  சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என்று தெரிவித்தது. இந்நிலையில் 11 பேரிடமும்  சபாநாயகர் தனபால் நாளை  காணொலி காட்சிமூலம் விசாரணை மேற்கொள்ளவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments