நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை - அமைச்சர் செங்கோட்டையன்

0 1497
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஆண்டிபாளையம் முதல் மோடூர்பாளையம் வரை 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை உள்ளிட்ட திட்டப்பணிகளை செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டு அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதனை பொருத்து தேர்வு நடத்தப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments