பார்சிலோனா அணியில் இருந்து விலக நட்சத்திர வீரர் மெஸ்ஸி முடிவு

0 1833

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ஆஸ்தான கிளப் அணியான பார்சிலோனாவில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா, காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8க்கு 2 என்ற கணக்கில் மோசமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் நடைபெற உள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியில் இருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா கிளப் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது 13வது வயதில் இருந்து மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments