அமெரிக்காவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருகிறது

0 1853
அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் வெகு விரைவாக குறைந்த வருவதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் வெகு விரைவாக குறைந்து வருவதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினசரி 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது 21 விழுக்காடு குறைவாகவே வைரசின் தாக்கம் இருப்பதாகவும் பல்கலை.யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிரேசிலை ஒப்பிடும் போது இது நம்பிக்கையூட்டும் விஷயமாக இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் மோனிகா காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றுள்ளதும், முகமூடி அணிவதாலும் நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 7.3 விழுக்காட்டில் இருந்து 6.1 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments