பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது- ஐ.சி.எம்.ஆர்

0 2833
முகக் கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் எச்சரித்துள்ளது.

முகக் கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் எச்சரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பாதித்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசின் வேகமானப் பரவலுக்குக் காரணம் பொறுப்பில்லாத மக்கள் தான் என்று மருத்துவ நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டும் திரியும் நபர்களால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ICMR. இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் பல்ராம் பார்கவா, இளையவர்கள் வயதானவர்கள் என்று யாரையும் குறிப்பிடாமல் பொறுப்பற்ற கவனம் இல்லாத மக்களால்தான் கொரோனா பரவுகிறது என்றார். இந்தியாவில் மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் இருப்பதாகவும் பல்ராம் தெரிவித்தார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments