பாஜகவில் இணைந்த அண்ணாமலை.. ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..!

0 5667
பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய அண்ணாமலை, பெங்களூரு, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையில் முக்கிய பதவிகளை வகித்தவர். அங்கு கர்நாடகத்தின் சிங்கம் என அடைமொழியோடு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டில், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சமூக ஆர்வலராக மாறினார்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியில் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments