அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!

0 2164
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11ம் வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11ம் வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை கடந்த 17ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், முதல் 2 நாட்களிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக சேர்ந்தனர். தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை 50 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவர்கள், புதிதாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிகமானோர் அரசுப் பள்ளிகளை நாடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments