சென்னை மாணவி லண்டனில் கடத்தல்: ஜாகீர் நாயக் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..!

0 46145
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் உடன் தொடர்புடைய வங்கதேச கும்பல், லண்டனில் சென்னையைச் சேர்ந்த மாணவியை கடத்தியது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் உடன் தொடர்புடைய வங்கதேச கும்பல், லண்டனில் சென்னையைச் சேர்ந்த மாணவியை கடத்தியது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், கடந்த மே 28-ஆம் தேதி காணாமல் போனதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தை அளித்த புகாரில், கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மாணவி கடத்தப்பட்டதில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தீவிரவாத கும்பல் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்ததால், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி மாற்றப்பட்டது.

வழக்குப் பதிவு செய்து என்ஐஏ மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நஃபீஸ் என்ற வங்கதேசத்தை சேர்ந்த நபர், அவரது கும்பலோடு சேர்ந்து சென்னை மாணவியை லண்டனில் கடத்தியதும், மிரட்டி மதம் மாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் நஃபீஸ் உடன் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் நஃபீஸ் வங்கதேச அரசியல்வாதியின் மகன் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாணவியின் குடும்பத்திடம் பணம் பறிக்க கடத்தல் நடைபெற்றதா, அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக மாணவி கடத்தப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் எந்த அடிப்படையில் இந்த கடத்தலுக்கு துணை போய் இருக்கிறார் என்பதையும் என்ஐஏ விசாரித்து வருகிறது. கடத்தலில் தொடர்புடைய நஃபீஸை இந்தியா அழைத்து வந்து விசாரணை செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments