மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

0 777

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைத் தயார் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வனப்பகுதிக்குச் சென்ற போலீசார், மாவோயிஸ்ட்டுகளின் மறைவிடங்களில் இருந்த வெடிமருந்து குழாய்கள், 93 டெட்டனேட்டர்கள், கேஸ் சிலிண்டர்கள், லேத் இயந்திரங்கள், வெல்டிங் இயந்திரங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

காவல்துறையினர் மீது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தும் பொருட்டு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கும் ஆயுதங்களை சரிசெய்வதற்கும் மாவோயிஸ்டுகள் இந்த இடத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என மல்கான்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments