அதிவேக தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு கொரோனா

0 2258
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும், உலகின் அதிவேக மனிதர் என்று பெயர் பெற்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும், உலகின் அதிவேக மனிதர் என்று பெயர் பெற்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் சமீபத்தில் தனது 34வது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில், தனக்கு அறிகுறியற்ற நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர் பத்திரமாக இருக்கும் படியும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments