ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எஃப் -35 ஜெட் விமானங்களை விற்க திட்டம் - ஜாரெட் குஷ்னர்

0 1710
இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தால் எஃப் -35 ஜெட் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பனின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தால் எஃப் -35 ஜெட் விமானங்களை  ஐக்கிய அரபு அமீரகம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பனின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாட்டில் இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் கையொப்பமிட்டுள்ளன.

இந்த சமாதான உடன்படிக்கை மூலம், எஃப் -35 ஜெட் விமானங்களை பெற வேண்டும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால முயற்சி வெற்றியடைய வாய்ப்பு உள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குஷ்னர் கூறினார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் ராணுவம் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments