சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு வழங்கி முதலமைச்சர் வாழ்த்து

0 1167
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு வழங்கி முதலமைச்சர் வாழ்த்து

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரனை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.

கலை பண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கான கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கலை பண்பாட்டுத் துறையின் https://www.artandculture.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலை துவக்கி வைத்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments