தீவிரவாதியின் வீட்டில் சோதனை - வெடிகுண்டுகள் பறிமுதல்..!

0 5227

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ,எஸ். தீவிரவாதியின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் இதுவரை 30 கிலோ வெடிப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் டெல்லியில் புகுந்த தீவிரவாதியை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த பாதுகாப்பு காரணமாக சுதந்திர தினத்தில், திட்டமிட்டபடி சதித்திட்டத்தை அவனால் அரங்கேற்ற முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யூசுப் என்ற முஸ்தகிம் கான் என்ற அந்த தீவிரவாதியின் உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்புரில் உள்ள வீட்டை சிறப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக சோதனையிட்டனர். ஏற்கனவே குக்கர் வெடிகுண்டு உள்பட 15 கிலோ எடை கொண்ட வெடிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்றும் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் வெடி குண்டுகள் பொருந்திய இரண்டு மேல்கோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தீவிரவாதியின் தந்தை மற்றும் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தமக்குத் தெரியாது என்றும் தமது மகன் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் முஸ்தகிம் கானின் தந்தை தெரிவித்துள்ளார்.

தான் தனியாக செயல்பட்டு வந்ததாக கான் கூறியதை அதிகாரிகள் நம்பவில்லை. அவனுக்கு இரண்டு கூட்டாளிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களுக்கு கானை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments