கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் பேரழிவு..!

0 1468

கலிபோர்னியாவில் சுமார் 10 லட்சம் ஏக்கர் வனப்பரப்பை காட்டுத்தீ நாசமாக்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டதட்ட 25 லட்சம்  பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அதிக வெப்பநிலை மற்றும் மின்னல்கள் காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தண்ணீர், ரசாயனப் பொடிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் அதிவேக காற்று காரணமாக காட்டுத்தீ பரவுவதை தடுக்க குழித்தோண்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே சாண்டா குரூஸ் மலையைச் சுற்றி உள்ள இடங்களில் இருந்து வெளியே மறுக்கும் மக்களும் இக்கட்டான சூழலை பயன்படுத்த முயற்சிக்கும் திருடர்களும் தங்கள் பணிக்கு தடையாக உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பொருட்டு 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளியேற மறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய பெரு நெருப்பை பேரழிவாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எனவே மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தற்காலிக வீட்டு வசதி போன்ற செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments