பீகாரில் கூட்டணிக்கு நிதிஷ்குமார் தலைமை என ஜே.பி.நட்டா பேச்சு

0 1423
பீகார் சட்டமன்றத் தேர்தலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கொள்ளும் எனப் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கொள்ளும் எனப் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைவதால் அக்டோபரில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக, லோக் ஜனசக்தி ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்னும் பெயரில் ஓரணியாகப் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதாகும்.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை கூறும் வகையில் பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய நட்டா, பாஜக, ஐக்கிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி ஆகியவை நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments