கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையம் வங்கி திறப்பு

0 855
கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையம் வங்கி திறப்பு

கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையம் மூலம் விபத்துகளில் கை,கால் உள்ளிட்டவற்றை இழந்தவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடற்பாகங்கள் பொருத்தப்படும்.

தொடர்ந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியையும் தொடங்கி வைத்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments