லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 6323
லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை ஒரகடத்தில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஒரகடம் ஏ.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது விக்னேஷ், 15 வயது சிறுவனான செல்வா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

செங்குன்றம் அம்பத்தூர் நெடுஞ்சாலையில் ஒரகடம் நாயுடு ஹால் துணிக்கடை அருகே, பின்னால் வந்த எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று, இருசக்கரவாகனத்தில் மோதியது.

நிலைதடுமாறி சாலையில் விழுந்த இருவர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறின. இதில் படுகாயமடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், லாரியை பறிமுதல் செய்த பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments