கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பின் வாங்கச் சீனா மறுப்பு

0 19879
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பின் வாங்கச் சீனா மறுப்பு

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து படைகளை விலக்க மறுக்கும் சீனா, தொடர்ந்து அப்பகுதியில் உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முன்பிருந்த நிலையைப் பராமரிக்கும் வகையில் படையினரைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் எனச் சீனாவை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பல சுற்றுப் பேச்சுக்களிலும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தியும், சீனா பின்வாங்க மறுத்து வருகிறது.

சீனப் படைகளைப் பின்வாங்கச் செய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அதேநேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சாலை அமைத்தல், விமானப் படைத்தளங்களை மேம்படுத்தல், தகவல் தொடர்புக்காகக் கண்ணாடி இழை வடம் பதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments