தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 9179
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments