அசாம் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பெயரை அறிவிக்க வாய்ப்பு ?

0 4976
அசாம் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் பெயரை அறிவிக்க வாய்ப்பு?

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அசாமில் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என முன்னாள் முதலமைச்சரான தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த  தலைவரான தருண் கோகோய் குவகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அடுத்த ஆண்டு அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது முதலமைச்சர் வேட்பாளராக ரஞ்சன் கோகோயின் பெயரை பாஜக அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் அளித்த தீர்ப்பில் பாஜக மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதையடுத்தே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகவும் தருண் கோகோய் தெரிவித்தார்.

ரஞ்சன் கோகோய் எளிதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகி இருக்க முடியும் எனும்போது, ஏன் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்ததை மறுக்கவில்லை என்றும் தருண் கோகோய் வினா எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments