அமேசான் பிரைமில் சூரரைப் போற்று.. சூர்யாவின் முடிவு சுயநலமிக்கது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கண்டனம்

0 9742

சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யாவின் முடிவு சுயநலமிக்கது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் தன்னை ஏற்றிவிட்ட ஏணி என்பதை சூர்யா மறந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா காலத்தில் ஓடிடி போன்ற டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நலன் கருதி திரையரங்கு உரிமையாளர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடும் நிறுவன படங்களை வெளியிடமாட்டோம் என கூறும் திரையரங்கிற்கு பெரிய படங்களை கொடுக்க போவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments