எஸ்.பி.பி உடல்நிலை - மருத்துவமனை அறிக்கை

0 154332
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை

பின்னணி  பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளதாக சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அமைந்தகரை M.G.M மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மாலையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவர் குழுவினர், அவரது உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எக்மோ மூலம் அதிகம் பேர் சிகிச்சை பெறுவதால், அந்நாடுகளின் மருத்துவ குழுவினரின் ஆலோசனையை பெற்று, எஸ்.பி. பாலசுப்பிர மணியத்திற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் M.G.M மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments