கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு?

0 3181

கோயம்பேடு காய்கறிச் சந்தையை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 27,28, 29ஆம் தேதிகளில்  மூன்று நாட்கள் கடை அடைப்பு நடத்த உள்ளதாக கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் வியாபாரிகள் சங்க தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தை நான்கு மாதங்களுக்கு முன் மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக சந்தை நடந்து வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலில் கோயம்பேடு சந்தையைத் திறக்க கோரிக்கை மனு அளிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தியாகராஜன், தமிழகம்  முழுவதும் வரும் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் கடை அடைப்பு நடத்த கோயம்பேடு காய்கறி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க பேரமைப்புடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments