நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா..945 பேர் பலி..!

0 1045
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 945 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 702ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 794ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 22 லட்சத்து 22 ஆயிரத்து 578 பேர் குணமாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் இதுவரை 3 கோடியே 44 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments