கொரோனா காலகட்டத்தில் தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

0 1071
கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில், ஆன்லைனில் மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், வாக்காளர்களுக்கு முகக்கசவம், கையுறை கட்டாயம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில், ஆன்லைனில் மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், வாக்காளர்களுக்கு முகக்கசவம், கையுறை கட்டாயம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் நோக்கில், நோய்த்தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு மையத்திற்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் கையுறை வழங்கப்படுவதோடு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். சோப் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, பெரிய அறைகளை வாக்குப் பதிவு மையங்களாக பயன்படுத்த வேண்டும். டெபாசிட் பணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 2 பேருக்கு மேல் செல்லக் கூடாது. ஆயிரத்து 500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்பதற்குப் பதிலாக, அதிகபட்சமாக ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதில் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு, என தனி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments