விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

0 666
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் மற்றும் அவருக்குப் படைக்கப்படும் பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியிருந்தது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் மற்றும் அவருக்குப் படைக்கப்படும் பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியிருந்தது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சந்தையில், வீடுகளில் வைக்க சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். எருக்கம் பூ மாலை, அருகம்புல் மாலை, நாவல்பழம், விளாம்பழம், கரும்புத்துண்டு, அவல், பொரி, கடலை வியாபாரம் விறுவிறுப்பாக காணப்பட்டது.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் சந்தையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை - தாம்பரம், பல்லாவரம் மார்க்கெட்டுகளில் மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து, சிறிய பிள்ளையார் சிலைகளையும், விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

திருவள்ளூரில் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஏராளமானோர் விநாயகர் சிலை மற்றும் கரும்பு, அருகம்புல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தென்குளக்கரை மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இரவிலும் ஆர்வமாக வந்திருந்தனர்.

மயிலாடுதுறை கடைவீதிகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகள் 50 ரூபாய்க்கும், வண்ணம் பூசிய சிலைகள் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments