சீனர்களுக்கு விசா வழங்க கட்டுப்பாடு..!

0 1944
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் முன்னர் அவர்கள் குறித்த பாதுகாப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் முன்னர் அவர்கள் குறித்த பாதுகாப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களில் பணியாற்றுவோர், சீனாவை சேர்ந்த தொழிற்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கு  இந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சீனா தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பல்கலைக்கழகங்களுடன் சீனாவுக்கு உள்ள தொடர்புகளை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், சீன மொழி தொடர்பாக ஏற்படுத்தியுள்ள பாடதிட்ட ஒப்பந்தங்களை ஆராயவும் அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments