அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 28ம் தேதி முதல் செப் 4 வரை மாணவர் சேர்க்கை

0 1946

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 28ம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

109 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  ஜூலை மாதம் 20ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 92,000 இடங்களுக்கு 3,12,883 பேர் விண்ணப்பித்து, அதில் 2,25,819 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

சான்றிதழ் பதிவேற்றும் பணிகள் கடந்த 10-ம் தேதி வரை நடைபெற்றதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 11ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்திருந்தால் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், பாடப்பிரிவை ஒதுக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments