கொரோனா காலகட்டத்தில், தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 2037
கொரோனா காலகட்டத்தில், பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில், பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் தொடர்பான பணிகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம். வாக்குப் பதிவு மையத்திற்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இதேபோல, சோப் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, பெரிய அறைகளை வாக்குப் பதிவு மையங்களாக பயன்படுத்த வேண்டும்.

டெபாசிட் பணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 2 பேருக்கு மேல் செல்லக் கூடாது. ஆயிரத்து 500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்பதற்குப் பதிலாக, அதிகபட்சமாக ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் போன்ற நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments