தமிழகத்தில் மேலும் 5995 பேருக்கு கொரோனா.. 101 பேர் உயிரிழப்பு..!

0 2972
தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 32 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 101 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 6 ஆயிரத்து 340 - ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைச்சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவரும் 104 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 764 பேர் குணமடைந்தனர்.

சென்னை யில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 282 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 430 பேரும் ,கோவையில் புதிதாக 395 பேரும், திருவள்ளூரில் மேலும் 369 பேரும், நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments