தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு..!

0 2978
விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தமிழக பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தமிழக பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய விருது கள் வழங்கி, கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள விருது பெறுவோர் பட்டியலில், மாரியப்பன்தங்கவேலு இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டூத்தி சந்த், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானுபாக்கர் உள்பட 27 வீரர் - வீராங் கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, விளையாட்டு துறையின் சிறந்த பயிற்சியாளர்களுக்கான" துரோனாச்சாரியார்" விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான "தயான் சந்த்" விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments