ரவுடித்தனம் செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்

0 2637
ரவுடித்தனம் செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ரவுடித்தனம் செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நாமக்கல்லில் கோழி நோயியல் ஆராய்ச்சி மையமும், பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையமும் அமைத்து தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார். ரவுடித்தனம் செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு சில சம்பவங்களை வைத்து போலீசாரை குறை கூறுவதை ஏற்க முடியாது என பதிலளித்த முதலமைச்சர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள் என்றார். தா.கிருட்டிணன் கொலை உள்ளிட்ட சம்பவங்களையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் வரும் போது கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை செய்யாதவர்களை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். கொரோனா பரிசோதனை எடுக்காமல் தருமபுரி திமுக எம்பி செந்தில் வருகை தந்ததால் தருமபுரி ஆய்வு கூட்டத்தில் அனுமதிக்கவில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழகத்திற்கு 2ஆம் தலைநகர் வேண்டும் என்பது அமைச்சர்களின் தனிப்பட்ட கோரிக்கை என முதலமைச்சர் பதிலளித்தார். தொற்று தொடர்பாளர்களை தடமறியவே இ-பாஸ் முறை என்றும், இ-பாஸ் முறையை கடுமையாக அமல்படுத்துவதால்தான் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல்லில் கோழி நோயியல் ஆராய்ச்சி மையம், பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments