அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ

0 1108
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீப் பற்றி எரிந்து வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீப் பற்றி எரிந்து வருகிறது.

கடந்த 72 மணி நேரத்தில் கலிபோர்னியாவில் கிட்டதட்ட 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியயதாகவும் இதில் 367 இடங்கள் தீப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலோ ஆல்டோ அருகே இரு வேறு இடங்களில் பற்றிய காட்டுத் தீயில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் எரிந்து நாசமானதாகவும் சுற்றுவட்டார மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து அவரசநிலையை அறிவித்துள்ள ஆளுநர் கவின் நியூசோம், காட்டுத்தீயை கட்டுப்படுத்த அரிசோனா, டெக்சாஸ், நெவாடா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 375 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments