பெருவில் குழந்தைகளை மையமாக வைத்து கொரோனா பரவல் தீவிரம் - சுகாதாரத்துறை

0 651
பெருவில் குழந்தைகளை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெருவில் குழந்தைகளை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஜூன் மாத இறுதியில் இருந்து நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறியற்ற குழந்தைகளிடம் இருந்து பெரியோர்களுக்கு தொற்று அதிகளவில் பரவுவதாகவும், இது வரை 108 குழந்தைகள் சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாட வழங்கப்பட்ட அனுமதி நேரம் 30 நிமிடமாக குறைத்து அதிபர் மார்ட்டின் விஸ்காரா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments