விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

0 1397
தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் மகிழ்ச்சியான இத்தருணத்தில், சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். விநாயகர் அறிவு, வளம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் திருவுருவாகப் போற்றப்படுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கி,
அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு, நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments