ஸ்ரீசைலம் அணை நீர்மின்நிலையத்தில் தீ விபத்து

0 945
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் அடிவாரத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலுள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர எல்லையையொட்டி தெலங்கானாவில் இருக்கும் அந்த நீர்மின் உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ விபத்து நேரிட்டது.

அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 19 பேரில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் பொறியாளர், உதவி பொறியாளர்கள் உள்பட 9 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் நேற்றிரவு முதல் ஈடுபட்டனர். இதேபோல் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில் 2 உதவி பொறியாளர்கள் உள்பட 9 பேரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். மீன்கசிவினால் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments