விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... தமிழக அரசு அறிவுறுத்தல்

0 3412
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... தமிழக அரசு அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், மத்திய அரசின் வழிகாட்டல்படியும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டும், தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்களின் நலன் கருதி தடை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியன நாட்டின் அனைத்து பகுதிகளும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு சுட்டிக் காட்டி உள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாடுகளை தளர்த்தினால் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தீவிரமாக பரவும் நிலை உருவாகிவிடும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று, அரசின் உத்தரவில் தலையிட இயலாது என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

காவல் துறையின் கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என சில இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனிடையே, புதுச்சேரியிலும் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments