பாஜகவிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்

0 1027
பாஜகவிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்

பாஜகவிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, விளக்கமளிக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான தகவல்தொழில்நுட்ப  நிலைக்குழு அனுப்பியுள்ள சம்மனில், வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக பிரதிநிதிகளும், அதே தேதியில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது, சமூக வலைத்தளங்களையும், ஆன்லைன் செய்தி ஊடகங்களையும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்டவை பற்றி, விவாதிப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments