வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

0 513
வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments