பழைய பாடப்புத்தகங்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு

0 1747

போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக கல்வியியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட 130 படிப்புகளுக்கான பழைய பாடநூல்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கற்பிக்கப்பட்டு வரும் 130 பாடப்பிரிவுகளுக்கான பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விபரங்களை இணையதளம் வாயிலாகவும், தொலைபேசி எண் வாயிலாகவும் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். பாடநூல்களை நேரடியாக வாங்க விருப்பம் உள்ளவர்கள், பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று DD மூலம் கட்டணத்தை செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments