தமிழ்நாட்டில் இன்று 5986 பேருக்கு கொரோனா.. 116 பேர் பலி..!

0 3469
தமிழ்நாட்டில் இன்று 5986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 19 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 116 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 6 ஆயிரத்து 239- ஐ எட்டியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 21வயது இளம்பெண் ஒருவர், கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.  வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 742  பேர் குணமடைந்திருப்பதால், இதுவரை "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 177 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 462 பேரும் ,கோவையில் புதிதாக 397 பேரும், திருவள்ளூரில் மேலும் 393 பேரும்,  நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments