தேர்தல் பிரச்சாரத்தில் “சித்தி” என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹாரிஸ்

0 3853

அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், தேர்தல் பரப்புரையில் “சித்தி” என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது, வெளிநாட்டு வாழ் தமிழர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில், 5 நாட்கள் நடைபெறும் இணையவழி மாநாட்டில், தனது குடும்ப உறுப்பினர்கள் குறித்து உரையாற்றும் போது, தனது சித்திக்களை "சித்தீஸ்" என குறிப்பிட்டார். இதையடுத்து, சித்தி என்ற தமிழ் சொல்லின் அர்த்தம் குறித்து அமெரிக்கர்கள் கூகுளில் தேடத் துவங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments