சாத்தான்குளம் முன்னாள் உதவி ஆய்வாளர்கள் மீது 8 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

0 1224

ராஜாசிங் என்பவரை தாக்கியது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் உதவி ஆய்வாளர்கள் மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய் குளத்தைச் சேர்ந்த ராஜசிங் என்பவரை, ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு விசாரணைக்கு சென்ற முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமாவிடம், புகார் அளித்தார்.

இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது 8 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ராஜசிங்கிடம் சிபிசிஐடி ஆய்வாளர் சபிதா விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments