தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

0 6522
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர் - மோடி

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம். எஸ். தோனியை வாழ்த்தி அவருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், ஓய்வு அறிவிப்பு,130 கோடி இந்தியர்களுக்கும் ஏமாற்றம் அளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் எம். எஸ். தோனியும் ஒருவர் என பாராட்டி உள்ள பிரதமர் மோடி, ஒரு சிறிய நகரத்தில் பிறந்து, அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து, இந்தியர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு உயர்ந்து, தேசிய அளவில் ஜொலித்தவர் எம். எஸ். தோனி என  பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிக்சர் அடித்து, இந்தியாவிற்கு கோப்பையை எம். எஸ். தோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடி யாது என்றும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

பல கோடி இளைஞர்களுக்கு எம். எஸ். தோனி, ஒரு உத்வேகம் என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் மோடியின் பாராட்டுக்கு , எம். எஸ். தோனி நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments