பாடும் நிலா.. எழுந்து வா.. - கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் - ரஜினி

0 8426
பாடும் நிலா.. எழுந்து வா.. - கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் - ரஜினி

கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் பிரபல திடைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனை மீட்டெடுக்க கூட்டுப்பிரார்த்தனைக்கு நடிகர் ரஜினிகாந்த அழைப்பு விடுத்துள்ளார். 

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து உடல்நலம் பெற்று எழுந்துவரவேண்டி பல்வேறு பிரபலங்களும் வீடியோ வழியாக தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து வந்த நிலையில்  எஸ்.பி.பியை மீண்டு வர அழைக்கும் நோக்கில் அவர் பாடிய பாடல்களை இன்று மாலை 6மணிக்கு ஒலிக்கச் செய்ய இயக்குநர் பாரதிராஜா கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தினருக்கு விடுத்துள்ள அறிவிப்பில் பாடும்நிலா எழுந்துவா,  இன்றுமாலை 6மணிமுதல் 6.05 மணிவரை கூட்டுப்பிரார்த்தனை செய்து எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments