வெடிகுண்டு வீசி பயிற்சி மேற்கொண்ட ரவுடி துரைமுத்துவின் பகீர் வீடியோ...

0 8123

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தன்னை பிடிக்க முயன்ற போலீசார் மீது வீசிய வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து வெடி குண்டு வீசி பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. 

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து, வெடிகுண்டு தயாரித்து மீண்டும் ஒரு கொலைக்கு தயாராகி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பிடிக்கச் சென்ற போலீசாரை நோக்கி துரைமுத்து வீசிய வெடிகுண்டு வெடித்ததில், காவலர் சுப்ரமணியன் உயிரிழந்தார். அப்போது துரைமுத்துவும் பலியானான். image

இதனிடையே உயிரிழந்த ரவுடி துரைமுத்து ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் வெடிகுண்டு வீசி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.imageஇந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரவுடியின் உடல் மீது வீச்சரிவாளை வைத்து சொந்த ஊரான ஏரல் அருகிலுள்ள மேல மங்கலம்குறிச்சியில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments