கோவாவில் 46.11 சதுர கி.மீ நிலம் தனியார் வனப்பகுதியாக அங்கீகாரம்

0 1093
கோவாவில் சுமார் 46 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை தனியார் வனப்பகுதியாக அங்கீகரித்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவாவில் சுமார் 46 சதுர  கிலோமீட்டர் நிலப்பரப்பை தனியார் வனப்பகுதியாக அங்கீகரித்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி மத்திய அரசு சாவந்த் கமிட்டியை அமைத்தது.

வனப்பகுதிக்கான தகுதிகளைக் கொண்ட தனியார் நிலங்களைப் பாதுகாக்கவும் அவற்றை அங்கீகரிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் கோவா பவுண்டேசன் சார்பில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் கோவா அரசு தனியார் வனப்பகுதிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுப்பப்பட்டது.

இதனை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நேற்று தனியார் வனப்பகுதிக்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments