திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதா? மத்திய அரசின் முடிவுக்கு பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு...

0 668
திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினம் என்று கூறியுள்ளார்.

மாநில அரசு சர்வதேச விமான நிலையக் கட்டுமானத்திற்காக 23 புள்ளி 57 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது என்றும்  தனியாருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டால், மாநில அரசு விமான நிலைய வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட பங்களிப்பு கவனத்தில் கொள்ளப்படும் என்று கடந்த 2003ம் ஆண்டில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் சார்பில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பராமரிப்புப் பணியை ஒப்படைக்குமாறு தாம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இப்பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments