சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு

0 655
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து, விவசாயம், குடியிருப்பு என அனைத்துவகையான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

நீர்வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாகாணத் தலைநகர் செங்டூவில் கடந்த 1981ம் ஆண்டுக்குப் பின் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெய்து வரும் கனமழை காரணமாக புஜியாங் ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மழை வெள்ளம் காரணமாக சிச்சுவான் மாகாணத்தில் 219 பேர் உயிரிழந்ததாகவும், 63 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments