உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு

0 493
உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 25 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 25 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 69 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 48 ஆயிரம் பேருக்கும், அமெரிக்காவில் 43 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,200 பேரும், பிரேசிலில் 1,170 பேரும், இந்தியாவில் 980 பேரும் மெக்ஸிகோவில் 750 பேரும் என பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பலியால் மரணித்தோர் எண்ணிக்கை 6,450 ஆக உள்ளது.

எனவே இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடியே 53 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 லட்சத்து 47 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments